சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)

தேவையான பொருட்கள்
5 பேர்
600கிராம் ‌சிக்கன்
500 கிராம் பாஸ்மதி அரிசி
4 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
300 கிராம் வெங்காயம்
300 கிராம் தக்காளி
2 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
1கைப்பிடி கொத்தமல்லி புதினா
4 பச்சை மிளகாய்
150 மிலி தயிர்
100மிலி எண்ணெய்
50 மிலி நெய்
1 தேக்கரண்டியளவு கரம் மசாலா
3பிரியாணி இலை

சமையல் குறிப்புகள்
30 மணி நேரம்
1 1/2 மணி நேரம் ‌பாஸ்மதி அரிசி யை ஊற வைக்கவும்

2 சிக்கன் ஐ சுத்தம் செய்தபின் 2 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள் தயிர் உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

3 பிரியாணி செய்ய பாத்திரத்தை சூடேற்றி எண்ணெய் நெய் ஊற்றி சூடேறியதும் கரம் மசாலா பொருட்களை சேர்த்து நீள்வாக்கில் வெட்டிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி மிதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி கொத்தமல்லி புதினா மிளகாய் மிளகாய் தூள் உப்பு சேர்த்து எல்லாம் நன்கு வதக்கி வரும் வரை வதக்கவும்.

4 பின்‌ ஊற வைத்து சிக்கன் சேர்த்து வேகவிடவும்.

5 சிக்கன் நன்கு வெந்ததும் 1கப் அரிசிக்கு 1 1/2கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் ஊற வைத்த அரிசி சேர்த்து மிதமான தீயில் அரிசி 80% வெந்ததும் தீயை குறைத்து தம்மில் 15 நிமிடம் போட்டு அணைத்தால் சிக்கன் பிரியாணி தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *