சிக்கன் குழம்பு(chicken curry recipe in tamil)

தேவையான பொருட்கள்
4 நபர்கள்
1/2 கி சிக்கன்
2பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
2தக்காளி நறுக்கியது
2 பச்சை மிளகாய்
1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1 பட்டை
2 கிராம்பு
1 ஏலக்காய்
2பிரியாணி இலை
1/2 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
1 டேபிள்ஸ்பூன் மல்லி தூள்
1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
1 சிட்டிகை மஞ்சள் தூள்
1 சிட்டிகை மஞ்சள் தூள்
4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
10கறிவேப்பிலை இலைகள்
தேவையானஅளவு உப்பு
தேவையானஅளவு தண்ணீர்
கையளவு நறுக்கிய கொத்தமல்லி
1/4 கப் துருவிய தேங்காய்
1 டீஸ்பூன் கசகசா
1/4 டீஸ்பூன் சோம்பு
5 முந்திரி பருப்பு

சமையல் குறிப்புகள்
30 நிமிடங்கள்
1 முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி எடுத்து கொள்ளவும்.
2 அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைக்கவும். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்க்கவும். பின் வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
3 பின் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும். பின் சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும் நன்கு வதக்கவும்.
4 தேங்காய் சோம்பு கசகசா முந்திரி பருப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். இதை வதங்கியதும் கொண்டிருக்கும் சிக்கனுடன் சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மூடி 3-4 விசில் வைக்கவும்.
5 பின் கேஸ் போனதும் திறந்து கொத்தமல்லி இலை சேர்க்கவும். சுவையான சிக்கன் குழம்பு தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *