சுய முன்னேற்றம் என்பது தன்னை தானே மேம்படுத்தி கொள்வது. அன்றாட வாழ்க்கையில் பின்பற்றும் சிறிய மாற்றங்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கீழக்கண்ட 7 பழக்கங்களை பின்பற்றினால், வாழ்க்கையில் பெரிய வித்தியாசத்தை காண முடியும்.
- அதிகாலை எழுதல்:
காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் தினமும் அதிகாலை எழுந்திருக்கும் பழக்கத்தை வளர்த்து கொண்டால், உங்கள் வாழ்க்கை, மனநிலை மற்றும் நடத்தை மாறுவதை கண்கூடாக பார்ப்பீர்கள். இந்த பழக்கத்தால் காலையில் கிடைக்கும் நேரத்தை உடற்பயிற்சி, யோகா, வாக்கிங் போன்றவற்றிற்கு பயன்படுத்தி கொள்ள முடியும். நீங்கள் ஒருபோதும் தாமதமாக எழுந்திருக்க மாட்டீர்கள். - தியானம் :
தினமும் காலையில் தியான பயிற்சி மேற்கொள்ள பழக வேண்டும். இது உங்கள் மனதை அமைதிப்படுத்துவதுடன், மன அழுத்தம், தேவையற்ற பதற்றத்தை போக்க உதவும். இது உங்களை மகிழ்ச்சியாக உணர வைப்பதுடன், ஞாபக சக்தியை அதிகரிக்கும். - டைரி எழுதுதல் :
நீங்கள் நேரமே எழுந்து, தியான பயிற்சியை மேற்கொண்டதற்கு பின்னர், சிறிய நேரத்தை நீங்கள் சந்தித்த சவால்கள், அதை வெற்றி கொண்டது எப்படி என்பது தொடர்பான எண்ணங்களை நோட்டில் எழுதுங்கள். இது வாழ்க்கையில் நீங்கள் கடந்து வந்த பாதையையும், உங்களை பற்றிய சுய விழிப்புணர்வை உருவாக்கும். - அதிக நீர் அருந்துதல் :
நீங்கள் காலை எழுந்தவுடன் செய்ய வேண்டிய மிக முக்கியமான பழக்கம், நீர் அருந்துவது. காலை எழுந்தவுடன் குறைந்தது அரை முதல் ஒரு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். எங்கு சென்றாலும், பாட்டிலில் தண்ணீரை எடுத்து செல்வது நல்லது. போதுமான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். - ஆக்டிவாக இருத்தல் :
நாள் முழுவதும் உங்களை ஆக்டிவாக வைத்து கொள்ள பழக வேண்டும். இது உங்களை நாள் முழுக்க நல்ல மனநிலையுடன், எனர்ஜியாகவும், கவனத்துடன் செயல்பட உதவும். தூக்கத்தை அதிகரிப்பதுடன், மன அழுத்தத்தை குறைக்கும். - புத்தகம் வாசித்தல் :
எந்தளவு வாசிக்கிறீர்களோ அந்தளவு நீங்கள் கற்று கொள்கிறீர் என அர்த்தம். உங்களுக்கு ஆர்வத்தை தூண்டுகிற புத்தகத்தை தேர்ந்தெடுத்து, வாசியுங்கள். பாட்காஸ்ட் கேளுங்கள். இது உங்கள் பேச்சாற்றலை அதிகரிப்பதுடன், அறிவை வளர்த்தெடுக்க உதவும். - சீக்கிரமே உறங்குதல்:
அதிகாலை எழுந்திருக்கும் வழக்கம் கொண்டவர்கள், முடிந்தவரை இரவில் நேரத்திற்குள் உறங்க செல்ல வேண்டும். இரவு நேரங்களில் தேவையற்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தல் அல்லது வீடியோ பார்த்தல் என நேரத்தை வீணடிக்க கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்கு உறங்கும் வகையில் அட்டவணையை பின்பற்ற வேண்டும்.