தேவையான பொருட்கள் :சாதம் – 1 கப்
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
பட்டை – ஒரு சின்ன துண்டு
ஏலக்காய் – 1
கிராம்பு – 1
வெங்காயம் – 1 (பெரியது)
தக்காளி – 3
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
மிளகாய் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி, புதினா – தேவையான அளவு
நெய் – 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விளுது – ½ டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
பட்டை – ஒரு சின்ன துண்டு
ஏலக்காய் – 1
கிராம்பு – 1
வெங்காயம் – 1 (பெரியது)
தக்காளி – 3
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
மிளகாய் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி, புதினா – தேவையான அளவு
நெய் – 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விளுது – ½ டீஸ்பூன்
செய்முறை :-
ஒரு எண்ணெய் சட்டியை அடுப்பில் வைத்து காய்ந்த உடன், தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.
வெங்காயமும் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மூடி விட்டு வேக விடவும்.
எண்ணெய் விட்டதும், சாதத்தை, கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி சமப்படுத்தவும்.
சாதத்திற்கு மேலே கொத்தமல்லி , புதினா தூவி நெய் சுற்றி ஊற்றி , 3 நிமிடம் மூடி போட்டு வேகவிட்டு இறக்கவும்.