காய்கறிகள் – போதுமான அளவு(கேரட்,பீன்ஸ்,கோஸ்)
முட்டை – 2
பூண்டு – 4-5 பொடியாக நறுக்கியது
எலும்பில்லா(BORNLESS) சிக்கன் – 1/4 கிலோ
சாதம் – தேவையான அளவு
மேகி கியூப் – 1
எண்ணெய் – 2 டீஸ்பூன்
மிளகுதூள் – தேவையான அளவு
செய்முறை :
அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து சூடானதுடன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
முட்டை நன்றாக பொடியாக வந்ததும், சின்ன துண்டுகளாக நறுக்கிய சிக்கனை சேர்த்து நன்றாக வதக்கி வேக வைக்கவும்.
பூண்டு, காய்கறிகள் எல்லாவற்றையும் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்.
மேகி க்யூபை தண்ணீர் கரைத்து சேர்க்கலாம்.
காய்கறிகள் வெந்ததும், சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
மிளகு தூள் பொடி கிளறி இறக்கவும்.