எலுமிச்சை சாதம் & உருளைக்கிழங்கு பொறியல் செய்முறை | Lemon Rice & Potato Fry Recipe in Tamil

எலுமிச்சை சாதம்


தேவையானவை

அரிசி…2 டீ டம்ளர்
தண்ணீர்… தேவைக்கு
உப்பு… தேவைக்கு

தாளிக்க

எண்ணெய்.. 1 குழி கரண்டி
கடுகு.. கொஞ்சம்
கறிவேப்பிலை.. கொஞ்சம்
காய்ந்த மிளகாய்… 2
உளுந்து… கொஞ்சம்
முந்திரி பருப்பு… 2 ,3
எலுமிச்சை பழம் … 1 (சாறு)



செய்முறை

அரிசியை நன்கு கழுவி , அளவு தண்ணீர், உப்பு போட்டு சமைக்கவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு.. கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், உளுந்து, முந்திரி பருப்பு, கொஞ்சம் உப்பு, தேவை என்று நினைத்தால் கொஞ்சம் காயல் மசாலா தூள் சேர்த்து தாளிக்கவும்
சாதம் போட்டு கிளறவும்..  பிறகு அதில் எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கிளறிவிடவும். எலுமிச்சை சாதம் தயார்




உருளை கிழங்கு பொறியல்

தேவையானவை

உருளை கிழங்கு..2
உப்பு… தேவைக்கு
தனி மிளகாய் தூள்.. ½ தே கரண்டி
கடுகு.. கொஞ்சம்
கறிவேப்பிலை.. சிறிது


செய்முறை
உருளை கிழங்கை வெறுமனே ஒரு குக்கரில் வேகவைக்கவும்.. பின் தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்து கொள்ளவும்
உப்பு ,தனி மிளகாய் தூள், சேர்க்கவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு..
கறிவேப்பிலை, உருளை கிழங்கையும் சேர்த்து வதக்கவும்.. குறைந்த தணலில் சமைக்கவும்.
வேகவைத்த உருளை கிழங்கு என்பதால் சுலபமாக வதங்கிவிடும்.. சுவையான உருளைகிழங்கு ரெடி..
சுவையான உணவு தயார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *