சாதம் – 1கப்
சிக்கன் 65 – 6-7 துண்டுகள் (போன்லெஸ்)
மற்றவை:
எண்ணெய் -2 மே.கரண்டி
பூண்டு – 6 பல் பொடியாக நறுக்கியது
பச்சமிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
வெங்காயம் – 1/2 நீட்டமாக நறுக்கியது.
விரும்பிய காய்கறிகள் கேரட், கோஸ், குடைமிளகாய், பட்டாணி -1 கப்
சோயா சாஸ் – 1/2 மே.கரண்டி
மிளகுத்தூள் – 1 மே.கரண்டி
முட்டை – 2
உப்பு – தேவைக்கு
செய்முறை:
முதலில் ஒரு நாண்ஸ்டிக் பேனில் சிறுது எண்ணெய் ஊற்றி முட்டையினை உடைத்து ஊற்றி அதில் சிட்டிக்கை மிளகு, சிட்டிகை உப்பு போட்டு நன்றாக கரண்டி வைத்து பிரட்டி பூ போல் உதிரியாக ரெடி செய்து தனியாக வைக்கவும்.
பிறகு அதே பேனில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பூண்டு, பச்ச மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும் இதனுடன் தேவைக்கு மிளகுத்தூள், சிறுது உப்பு சேர்த்து குறைந்த தணலில் வேக வைக்கவும்.
பாதி வெந்த பிறகு சிக்கன் 65 துண்டுகள் , முட்டை சேர்த்து பிரட்டி விடவும் இதனுடன் சோயாசாஸ் ஊற்றி மிக்ஸ் செய்வும் பிறகு அதில் சாதம் கலந்து நன்றாக மிக்ஸ் செய்து சிம்மில் 5 நிமிடங்கள் குறைந்த தணலில் வைத்து அடுப்பினை ஆப் செய்யவும். விரும்பினால் பொடியாக நறுக்கிய வெங்காய தாழ் இருந்தால் தூவவுன். சுவையான லெப்ட் ஓவர் ஃப்ரைடு ரைஸ் ரெடி..