பிரெட் துண்டுகள் – 7
பல்லாரி வெங்காயம் – 1
தக்காளி – 2
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
சாம்பார் பவுடர் – 1 மே கரண்டி
உப்பு – தேவைக்கு
கொத்தமல்லி இலை – சிறுது
வெங்காயத்தாள் – அழகரிக்க
தாளிக்க:
நெய் / எண்ணெய் – 2 மே கரண்டி
கடுகு, சீரகம் – 1/2 தேக்கரண்டி
காய்ந்த வத்தல் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
முந்திரி – 5
செய்முறை:
முதலில் பிரெட் துண்டுகளை சின்ன சதுரங்க துண்டுகளாக நறுக்கி வைக்கவும் . கடாயில் நெய் விட்டு பிரெட் துண்டுகளை கொஞ்சம் பிரட்டி எடுத்து தனியாக வைக்கவும். (டீப் ப்ரை செய்ய தேவையில்லை)
அதே கடாயில் சிறுது எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு தாளிப்பு பொருட்களை போடவும். வதங்கிய பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து குறைந்த தணலில் வதக்கவும்.
நன்றாக வதங்கிய பின்பு மஞ்சள்தூள் , சாம்பார் பொடி , உப்பு சேர்த்து சிறுது தண்ணீர் தெளித்து வதக்கவும். வதங்கிய பின்பு பிரெட் துண்டுகளை போட்டு நன்றாக பிரட்டி விடவும். இரண்டு நிமிடங்கள் மூடி போட்டு குறைந்த தணலில் வேக வைத்து கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். பரிமாறும் பொழுது நறுக்கிய வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்…
சுவையான பிரெட் உப்புமா 10 நிமிடங்களில் தாயார் ..