உருளை கிழங்கு வருவல்

தேவையான பொருட்கள் :

உருளை கிழங்கு                     –        4 ( மீடியம் சைஸ்)
சின்ன வெங்காயம்                 –        10,15
பச்சை மிளகாய்                      –        2 ( நீளமாக நறுக்கியது)
கடுகு                                       –        ½ டீஸ்பூன்
சீரகம்                                      –        ½ டீஸ்பூன்
உளுந்து                                  –        ¼ டீஸ்பூன்
எண்ணெய்                             –        2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை                       –        1 கொத்து
பெருங்காயத்தூள்                  –        1 பின்ச்
மிளகாய் தூள்                         –        தேவையான அளவு
மஞ்சள் தூள்                         –        ¼ டீஸ்பூன்
மிளகு தூள்                             –        ½ டீஸ்பூன்
தனியா தூள்                           –        ¼ டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
கொத்தமல்லி இலை              –        தேவைக்கு

செய்முறை :

நான் ஸ்டிக் (NON_STICK) தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து போட்டு வெடித்ததும்,
கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
உருளை கிழங்கை 2 விசில் விட்டு எடுத்து நறுக்கி வைக்க வேண்டும்.
வெங்காயத்தில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும், உருளை கிழங்கை சேர்த்து மூடி போட்டு வறுக்க வேண்டும்.
உருளை கிழங்கு ரெடியானதும் மிளகுதூள், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *