தோசை மாவு=தேவைக்கு
வெங்காயம்=2கொஞ்சம் பெரிது தக்காளி=1 பெரியது
காரட்=1 துருவியது
ப.மிகாய்=1
கொ.மல்லி இலை=கொஞ்சம்
மஞ்சள் தூள்=½tsp
வத்தல் தூள்=½tsp
கரம் மசாலா =½tsp
சோயா சாஸ்=½tsp
தக்காளி சாஸ்=1tsp
சோடா உப்பு=1சிட்டிகை
உப்பு=தேவைக்கு
எண்ணெய் =தேவைக்கு
செய்முறை :-
தோசை மாவில் உப்பு,சோடாப்பு போட்டு ஸ்பாஞ்ச் தோசைகளாக ஊற்றவும்.தோசைக்கல்லில் மாவைக் கொஞ்சம் தடிமனாக ஊற்றி மூடிப்போட்டு சிம்மில் வைத்து ஒருப்பக்கம் மட்டும் வெந்து எடுத்தால் ஸ்பாஞ்ச் தோசை ரெடி.இப்படி அனைத்து தோசைகளும் சுட்டு சிறுசிறு க்யூப்களாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.பின் தக்காளி,காரட்,பொடியாக நறுக்கிய ப.மிளகாய் சேர்த்து உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
பின்பு வத்தல் தூள்,கரம் மசாலா தூள்,மஞ்சள் தூள் சேர்க்கவும்.நன்கு சேர்ந்ததும் சோயா சாஸ்,தக்காளி சாஸ் ஊற்றி கிளறி,வெட்டி வைத்த தோசை களை போட்டு நன்கு கிளறவும்.கொ.மல்லி இலை போடவும்.மசாலாக்கள் அனைத்தும் தோசையில் நன்கு சேர்ந்ததும் அடுப்பை அணைக்கவும்.