கேரட் – 3
சாதம் – 1 கப்
வெங்காயம் – 1
கடலைபருப்பு – ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
நல்லெண்ணெய் – 2 குழி கரண்டி
கடுகு – ¼ டீஸ்பூன்
சீரகம் – ¼ டீஸ்பூன்
உளுந்து – ¼ டீஸ்பூன்
முந்திரிபருப்பு – 10
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – சின்ன துண்டு (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், கடலை பருப்பு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், முந்திரி பருப்பு, இஞ்சி,உப்பு போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி துறுவிய கேரட்டை சேர்த்து வதக்க வேண்டும்.
கேரட் வதங்கியதும், சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.
விருப்பபட்டால் கொத்த மல்லி இலை தூவி, ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி இறக்கவும்.