முட்டை கொத்து புரோட்டா

தேவையான பொருட்கள்:

புரோட்டா – 2
முட்டை – 1
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
தக்காளி – 1 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் – சிறிதளவு
வத்தல் தூள் – டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மல்லி இலை – அலங்கரிக்க (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – தேவைக்கு
உப்பு – தேவைக்கு

தாளிக்க:

பெருஞ்சீரகம் – 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை – தேவைக்கு
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது

செய்முறை:

முதலில் புரோட்டாவை பொடிதாக பிய்த்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளதை போட்டு தாளிக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்பு வெங்காயம் சேர்த்து வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். தக்காளி வெந்ததும் மஞ்சள் தூள், வத்தல் தூள், மிளகு தூள், தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு முட்டை சேர்த்து கிளறி உதிரியாக வெநததும் புரோட்டாவை சேர்த்து நன்கு கிளறி மல்லி இலை தூவி இறக்கவும்.

குறிப்பு:

1. முட்டைக்கு பதிலாக தேவையான காய்கறிகள் சேர்த்து கொள்ளலாம்.

2. இறுதியில் எலுமிச்சை சாறு சேர்த்தும் பறிமாறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *