கோழியப்பம்

தேவையானவை :

 மைதா – ½ கிலோ
 தேங்காய் – 4
 நாட்டுக்குகோழி முட்டை – 4
 உப்பு – தேவையான அளவு

செய்முறை  :

 தேங்காயை கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸ்யில் போட்டு ரொம்ப கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தலைப்பாலை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

 அந்த தேங்காயில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மிக்ஸ்யில் போட்டு இரண்டாம் பால் எடுக்கவும்.

 கடாயில் தலைப்பாலுடன் மைதாமாவு, உப்பு மற்றும் முட்டை இவைகளை சேர்த்து blender கொண்டு நன்கு அடிக்கவும்.

 ஆப்பமாவு பதத்திற்கு வரும் வரை இரண்டாம் பாலையும் ஊற்றி அடித்து வைத்துக்கொள்ளவும்.

 பின்பு, non-stick தவாவில் ஒரு கப் அளவிற்கு ஆப்பமாவை ஊற்றி முழுவதுமாக சுற்றி விடவும்.

 ஓரம் பொன்னிறமாக பொரிந்ததும் ஒரு plate இல் தனியாக தட்டி விடவும். அழகாக விழுந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *