காயல் ஸ்பெஷல் ஃபிஷ் பிரியாணி

தேவையான பொருட்கள் :

பிரியாணி அரிசி- 1kg
சீலா மீன் – 12 முதல் 15 துண்டுகள்
இஞ்சி பூண்டு விழுது –  200g
பட்டை,ஏலக்காய்,கிராம்பு – தேவைக்கு
நெய் – 150g
தேங்காய் எண்ணெய்- 150g
மு. பருப்பு – 100g
கிஸ்மிஸ்- 10g
கசகசா – 50g
பாதாம், பிஸ்தா- தேவைக்கு
தயிர் – 300g
பல்லாரி – 1/2 kg
தக்காளி – 1/2 kg
எலுமிச்சை பழம்- 1
ப.மிளகாய் – 100g
மல்லி புதினா- 100g

செய்முறை :

முதலில் மீனை கழுவி அதில் உப்பு, மிளகாய்த்தூள் சிறிது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஊற வைக்கவும். பின் வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் மீனை பொரித்து எடுக்கவும். 3 அ 4 துண்டு மீனை பொரிக்காமல் வைத்து கொள்ளவும்.

அதே எண்ணெயோடு மீதமுள்ள தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் சிறிதளவு போட்டு வதக்கி கிஸ்மிஸ், மு. பருப்பு போட்டு வெங்காயம் பொன்னிறம் வரும் வரை பொரித்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் அதே எண்ணெயில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், பட்டை, கிராம்பு, ஏலக்காய், ரம்ப இலை (அ) பிரியாணி இலை போட்டு தாளிக்கவும். பின்னர் ஊற வைத்த (பொரிக்காத)மீன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லி புதினா சேர்க்கவும். இதோடு பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, கசகசா சேர்த்து அரைத்து அந்த விழுதையும் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரிசியோடு சம அளவு தண்ணீர், உப்பு சேர்த்து வதக்கிய காய்கறிகளை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும். அரிசி வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி முதலில் பொரித்து வைத்த வெங்காயம், மு. பருப்பு, கிஸ்மிஸை மேலே தூவி பொரித்து வைத்த மீனையும் அடுக்கி மேலே மல்லி இலை தூவி பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *