முர்தபா


தேவையானவை :

 கோதுமை – ½ கிலோ
 சிக்கன் – 200 கிராம்
 பட்டாணி – 100 கிராம்
 வெங்காயம் – ¼ கிலோ
 முட்டை – 8
 கோஸ் – 100 கிராம்
 கேரட் – 50 கிராம்
 கருவாப்பிலை – 1 கொத்து
 மல்லி இலை – 1 கொத்து
 மஞ்சள் தூள் – 2 டீ ஸ்பூன்
 எண்ணெய் – 3 டீ ஸ்பூன்
 கீரைப்பொடி – 2 டீ ஸ்பூன்
 துருவிய தேங்காய் – 1 கப்
 உப்பு – தேவையான அளவு

செய்முறை 

 கோதுமையை கொஞ்சம் எண்ணெய்,உப்பு,தண்ணீர் ஊற்றி ரொட்டி மாவு பதத்திற்கு ஒன்று போல் நன்கு சேர்க்கவும். அரை கிலோ கோதுமைக்கு 15 ரொட்டிகள் வரும்.

 சிக்கனை தயிர், இஞ்சி பூண்டு,மசாலா மற்றும் உப்பு போட்டு வேகும்வரை வரட்டவும்.

 பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி,உப்பு,வெட்டிய வெங்காயம், கோஸ்,கேரட்,பட்டாணி,கருவேப்பிலை மற்றும் மஞ்சள்தூள் இவைகளை போட்டு நன்கு வதக்கவும்.

 வெங்காயம் வதங்கிய பிறகு மல்லி இலை, துருவிய தேங்காய் இவைகளை போட்டு கிளறி விடவும்.

 தேங்காய் கொஞ்சம் கனிந்து சேர்ந்த பிறகு கீரைப்பொடியை போட்டு கிளறி விட்டு இறக்கவும்.

 அடுப்பில் ரொட்டி தவாவை வைத்து தவா கொஞ்சம் காய்ந்ததும், 2 டீ ஸ்பூன் முட்டையை சட்டியில் பரவலாக ஊற்றவும்.

 பிறகு அதன்மேல் தேய்த்து வைத்த ரொட்டியை போட்டு,முட்டை ரொட்டியுடன் நன்கு ஒட்டிய பிறகு, ரொட்டியை திருப்பி போடவும்.

 ரொட்டியின் முட்டை மேல் 2 ஸ்பூன் கலியாவை வைத்து சதுரமாக நான்கு பக்கமும் மடிக்க வேண்டும்.

 பிறகு முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி அழகாக பொரித்து எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *