தேவையான பொருட்கள்:
இடியப்பம் – 10
பள்ளாரி வெங்காயம் – 2
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
நெய், எண்ணெய் – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவைக்கு
ஏலம், கருவாப்பட்டை, ரம்பை இலை, கருவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் பால் – 1/2 கப்
இடியப்பம் – 10
பள்ளாரி வெங்காயம் – 2
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
நெய், எண்ணெய் – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவைக்கு
ஏலம், கருவாப்பட்டை, ரம்பை இலை, கருவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் பால் – 1/2 கப்
செய்முறை:
ஃபரை பேனில் சிறிதளவு நெய், எண்ணை விட்டு அதில் நீள் வாக்கில் அரிந்த வெங்காயத்தை பொன்நிறமாகப் பொரித்துக் கொள்ளவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தி்ல் சிறிதளவு நெய் மற்றும் எண்ணை விட்டு அதில் இஞ்சி, பூண்டு விழுது, தயிர், கருவாப்பட்டை, ஏலம், ரம்பை இலை, கருவேப்பிலை, பச்சை மிளகாய், பொரித்த வெங்காயம் ஆகியவற்றை அதன் பச்சை வாடை போகும் வரை வதக்கிக்கொள்ளவும்.
அத்துடன், அரை கப் தண்ணீர் அரை கப் தேங்காய் பால், உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். கொதித்தவுடன் உதிர்த்து வைத்த இடியப்பத்தைப் போட்டு கிளறி விடவும். தண்ணீர் தன்மை வற்றி இடியப்பம் செட்டாகியதும் அடுப்பை அணைத்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.