சப்பாத்தி நூடுல்ஸ்

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி – 5
வெங்காயம் – 1
விரும்பிய காய்கறிகள் கோஸ் , கேரட், குடைமிளகாய் – ஒரு கப்
இஞ்சி சின்ன துண்டு
பூண்டு – 3 பல்
பச்ச மிளாகாய் – 3
சோயா சாஸ் – ஒரு மே கரண்டி
தக்காளி சாஸ் – ஒரு மே கரண்டி
வெங்காயத்தாள் – 2 மே கரண்டி
கொத்தமல்லி – சிறுது
எண்ணெய் – ஒரு மே கரண்டி

செய்முறை:

மீந்த சப்பாத்தியினை மெலிசாக நீட்டமாக கட் செய்து எடுத்து வைக்கவும். இது போல் இஞ்சி, பூண்டு, வெங்காயம், காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு இஞ்சி, பூண்டு வெங்காயம் போட்டு சிறுது வதக்கவும். கொஞ்சம் வதங்கிய பின்பு அதில் நீட்டமாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும். சிறுது தண்ணீர் தெளித்து மூடி போட்டு குறைந்த தணலில் வேக வைக்கவும். (தண்ணீர் இருக்க கூடாது) காய்கறிகள் வெந்த பின்பு நறுக்கிய சப்பாத்தியினை சேர்க்கவும் நன்றாக பிரட்டி விடவும். அதில் சாஸ் வகைகளை ஊற்றவும். நன்றாக பிரட்டி விட்டு தேவைக்கு உப்பு சேர்த்து இறக்கவும். நறுக்கிய வெங்காயதாள் விரும்பினால் சிறுது எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *