இட்லி – 7-8 படத்தில் உள்ளது போல் நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம் – 1
குடை மிளகாய் – 1/2
பச்சை மிளகாய் – 4 -5
பூண்டு – ஏழு பல்
இஞ்சி – சின்ன துண்டு
கருவேப்பிலை – 1 கொத்து
சீனி – ஒரு சிட்டிகை
உப்பு – தேவைக்கு
கொத்தமல்லி – தேவைக்கு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
சாஸ் :
தக்காளி சாஸ் – 2 மே.கரண்டி
சோயா சாஸ் – 1 மே.கரண்டி
வினிகர் – 1/2 மே.கரண்டி
செய்முறை:
வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாயினை நீட்டமாக நறுக்கி வைக்கவும். பூண்டு , இஞ்சியினை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் சிறுது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு நறுக்கிய இட்லியினை கலர் மாறும் வரை ஃப்ரை செய்து எடுத்து தனியாக வைக்கவும். கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும். கொஞ்சம் வதங்கிய பிறகு சாஸ் ,வினிகரை சேர்க்கவும். நன்றாக கிண்டிவிடவும். சீனிமற்றும் உப்பு சேர்க்கவும்.
பிறகு இதில் பொறித்த இட்லி துண்டுகளை போட்டு மெதுவாக கிண்டிவிடவும். இட்லியில் சாஸ்வுடன் கல்ந்தபின்பு மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் குறைந்த தணலில் சமைத்து எடுக்கவும். மேலே கொத்தமல்லி தூவி பரிமாரவும். சுவையான இட்லி மஞ்சூரியன் ரெடி.