சான்விச் பிரட் -6
மட்டன்-300 கிராம்
முட்டை -2
சின்ன வெங்காயம் -10
ப.மிளகாய்-1
மஞ்சல் தூள்-1/4tsp
மிளகாய்த்தூள்-1/4tsp
மிளகுத்தூள்-1/4tsp
சின்ன சீரகம்-1/4tsp
நெய்-200grm
கார்லிக்பேஸ்ட் -1 கப்
மொஞரெல்லா சீஸ்-100grm
ரஸ்க் தூள் -100grm
ரெட் சில்லி சாஸ்- 4tsp
டொமட்டோ சாஸ்-3tsp
சோயா சாஸ்-1tsp
எண்ணெய்-3tsp
கொத்தமல்லி தழை -தேவைக்கு
உப்பு -தேவைக்கு
செய்முறை:
1 கறியை நன்றாக சுத்தம் செய்தது கறிமசால் தூள் உப்பு இஞ்சி பூண்டு போட்டு வேக வைத்து நன்றாக வெந்ததும் மிக்ஸியில் ஒரு சுற்று போட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.
2. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் சின்னவெங்காயம்,மிளகாய்,மஞ்சல்தூள்,மிளகாய்த்தூள்,மிளகுத்தூள்,சின்ன சீரகம்,உப்பு,3ன்று சாஸ், இவை அனைத்தையும் நன்றாக வெந்ததும் அதில் வேக வைத்த அந்த கறியை போட்டு கிளறி 2 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
3.பிரட்டை சப்பாத்தி வலக்கும் கட்டையால் நன்கு வலத்து வைத்துக் கொள்ளவும்.
4.பிறகு இரண்டாக கட் செய்து படத்தில் உள்ள படி மொஞரெல்லா சீஸை துருவி போட்டு அதன் மேலே தயார் செய்து வைத்துள்ள அடக்கத்தை வைத்து அதன் மேல் கொத்தமல்லி தழையை தூவ வேண்டும்
5.பிறகு மேலே வைக்க கூடிய பிரட்டில் கார்லிக் பேஸ்ட் தடவி மேலே மூட வேண்டும்
6.பிறகு முட்டையை நன்றாக அடித்து அதில் பிரட்டி எடுத்து அதை ரஸ்க் தூளில் பிரட்டி இரண்டாக கட் செய்து வைக்கவும்.
7. (A)பிறகு அடுப்பில் தவ்வாவை வைத்து சூடானதும் நெய் ஊற்றி பிரட்டை உடையாமல் பொரித்து எடுக்கவும்.
8. (B)முட்டையில் பிரட்டாமல் பிரட் டோஸ்டரில் வைத்துத்தும் சாப்பிடலாம்.