இடியப்பம் -5 to 6
வெங்காயம் -1பெரியது
தக்காளி – 1 பெரியது
பச்சைமிளகாய் -2
மல்லி இலை ,புதீனா இலை
மஞ்சள் தூள் -1spn
மசாலா தூள் -2tsp
கரம் தூள்-1 tsp.
முந்திரி பருப்பு- 10
கிஸ்மிஸ்-10
பட்டை -1
கிராம்பு-2
ஏலக்காய் -2
இஞ்சி பூண்டு விழுது – 2 tsp
நெய் -3tsp
எண்ணெய் -2 tsp
செய்முறை;
முதலில் அண்டிப்பருப்பு கிஸ்மிஸ் இரண்டையும் நெய் விட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு ஓரு சட்டியில் நெய் எண்ணெய் ஊற்றி சுடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் போடனும். பிறகு வெங்காயம் சேர்த்து நல்ல பொன்னிறம் ஆகும்வைர வதக்கவும், பிறகு தக்காளி பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும், பிறகு அனைத்து மசாலாவையும் சேர்த்து நன்றாக மசாலா வதங்கும் வரை வதக்கவும்.
எல்லாம் வதங்கியதும் எண்ணெய் பிரிந்து வரும் இப்பொது இடியப்பத்தை உதிர்த்து போட்டு நன்றாக கிளறிவிட்டு,வறுத்த அண்டிப்பருப்பு கிஸ்மிஸ், புதீனா கொத்தமல்லி மேல தூவி 10 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அனைக்கவும் இடியப்பம் குஸ்கா ரெடி