மட்டன் சப்பாத்தி ரோல்

தேவையான பொருட்கள்

சப்பாத்தி – 10nos
எலும்பில்லாத மட்டன்- 1 Kg
இஞ்சி பூண்டு விழுது – 2 மே.கரண்டி
மஞ்சள்தூள் -1/2 tsp
மிளகாய் தூள் -1/2 tsp
கரம் மசாலா -1/4 tsp
சீரக தூள்-1/4 tsp
தயிர் -1/2 cup
ஆயில் -3 tbsp
முட்டை -1
லெமன் ஜூஸ் அரை மூடீ
வெங்காயம்- 3 பொடியாக நறுக்கியது
தக்காளி- 2
ப.மிளகாய் -3 பொடியாக நறுக்கியது
மல்லிதழை பொடியாக நறுக்கியது
உப்பு தேவைக்கு

செய்முறை:

1.ஒரு பவுலில் நறுக்கிய மட்டனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,கரம் மசாலா, சீரக தூள், லெமன் ஜூஸ், சேர்த்து நன்கு பிசிறி 1Hr ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.

2.பின்னர் வாணலியில் 3 Tbsp ஆயில் விட்டு ஏலம், பட்டை, கிராம்பு போட்டு பொறிந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும் பின், தக்காளி,ப.மிளகாய் போட்டு இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கி ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் மட்டன் கலவையை போட்டு அரை கப் தண்ணீர்விட்டு மூடி வைத்து வேக விடவும். மசாலா நன்கு சுருண்டு வெந்ததும் மல்லி தழை தூவி கிளறி இறக்கவும். இப்போ ஸ்டப்பிங் தயார்.

3.தேவையான அளவு சப்பாத்தி எடுத்து கொள்ளவும். முட்டையை கலக்கி வைக்கவும். வாட்டி வைத்திருக்கும் ஒரு சப்பாத்தியில் இரு பக்கமும் லேசா ஆயில் தடவி, முட்டையை தடவி தவாவில் வாட்டி எடுத்து ஒரு பக்கம் மட்டன் ஸ்டப்பிங் வைத்து ரோல் செய்யவும் பிரிந்துவிடாமல் இருக்க டூத் பிக்கை சொருகி இரு பக்கங்களையும் இணைத்து இரு நிமிடங்கள் தவாவில் போட்டு ஸிம்மில் வைத்து ரோலை இரு பக்கமும் திருப்பி போட்டு வாட்டவும்.

4.சுவையான மட்டன் சப்பாத்தி ரோல் ரெடி. பாதியாக கட் செய்து சாஸ், ரெய்தா, கொத்தமல்லி அ புதினா சட்னியுடன் பரிமாறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *