தேவையானவை :
கோதுமை – ½ கிலோ
சிக்கன் – 200 கிராம்
பட்டாணி – 100 கிராம்
வெங்காயம் – ¼ கிலோ
முட்டை – 8
கோஸ் – 100 கிராம்
கேரட் – 50 கிராம்
கருவாப்பிலை – 1 கொத்து
மல்லி இலை – 1 கொத்து
மஞ்சள் தூள் – 2 டீ ஸ்பூன்
எண்ணெய் – 3 டீ ஸ்பூன்
கீரைப்பொடி – 2 டீ ஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கோதுமையை கொஞ்சம் எண்ணெய்,உப்பு,தண்ணீர் ஊற்றி ரொட்டி மாவு பதத்திற்கு ஒன்று போல் நன்கு சேர்க்கவும். அரை கிலோ கோதுமைக்கு 15 ரொட்டிகள் வரும்.
சிக்கனை தயிர், இஞ்சி பூண்டு,மசாலா மற்றும் உப்பு போட்டு வேகும்வரை வரட்டவும்.
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி,உப்பு,வெட்டிய வெங்காயம், கோஸ்,கேரட்,பட்டாணி,கருவேப்பிலை மற்றும் மஞ்சள்தூள் இவைகளை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பிறகு மல்லி இலை, துருவிய தேங்காய் இவைகளை போட்டு கிளறி விடவும்.
தேங்காய் கொஞ்சம் கனிந்து சேர்ந்த பிறகு கீரைப்பொடியை போட்டு கிளறி விட்டு இறக்கவும்.
அடுப்பில் ரொட்டி தவாவை வைத்து தவா கொஞ்சம் காய்ந்ததும், 2 டீ ஸ்பூன் முட்டையை சட்டியில் பரவலாக ஊற்றவும்.
பிறகு அதன்மேல் தேய்த்து வைத்த ரொட்டியை போட்டு,முட்டை ரொட்டியுடன் நன்கு ஒட்டிய பிறகு, ரொட்டியை திருப்பி போடவும்.
ரொட்டியின் முட்டை மேல் 2 ஸ்பூன் கலியாவை வைத்து சதுரமாக நான்கு பக்கமும் மடிக்க வேண்டும்.
பிறகு முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி அழகாக பொரித்து எடுக்கவும்.