தேவையானவை :
மைதா – ½ கிலோ
தேங்காய் – 4
நாட்டுக்குகோழி முட்டை – 4
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
தேங்காயை கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸ்யில் போட்டு ரொம்ப கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தலைப்பாலை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அந்த தேங்காயில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மிக்ஸ்யில் போட்டு இரண்டாம் பால் எடுக்கவும்.
கடாயில் தலைப்பாலுடன் மைதாமாவு, உப்பு மற்றும் முட்டை இவைகளை சேர்த்து blender கொண்டு நன்கு அடிக்கவும்.
ஆப்பமாவு பதத்திற்கு வரும் வரை இரண்டாம் பாலையும் ஊற்றி அடித்து வைத்துக்கொள்ளவும்.
பின்பு, non-stick தவாவில் ஒரு கப் அளவிற்கு ஆப்பமாவை ஊற்றி முழுவதுமாக சுற்றி விடவும்.
ஓரம் பொன்னிறமாக பொரிந்ததும் ஒரு plate இல் தனியாக தட்டி விடவும். அழகாக விழுந்துவிடும்.