கீரை பாச்சோறு

தே.பொருட்கள்

அரிசி 400கிராம்
முருங்கை கீரை -ஒரு கட்டு
தேங்காய் 1
வெங்காயம் 250 கிராம்
சிறு பருப்பு 100 கிராம்
கீரை பொடி 5டீஸ்பூன்
மாசி தூள் 75 கிராம்
மஞ்சள் தூள், உப்பு தேவைக்கு.

செய் முறை

முதலில் அரிசியை கழுவி மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.பிறகு சிறு பருப்பு வறுத்து தண்ணீரில் கொஞ்சம் ஊற போட்டு வைக்கவும்..வெங்காயத்தை நீட்ட வாக்கில் அரிந்து வைக்கவும்…தேங்காயை துறுவி வைக்கவும்…கீரையை உதிர்த்து வைக்கவும்….

பிறகு அரிசி நன்றாக கொதித்து வரும் போது அரிந்த வெங்காயம்,பறுப்பு,கீரை இவை அனைத்தையும் போட்டு கிளரி வேக விடவும்…. ஓரளவிற்கு வெந்து வரும் போது தேங்காய் பூ போட்டு நல்ல பதம் வந்ததும் அனைத்து விடலாம்…புக்கை சோறு பதம் வரும்…

பிறகு இன்னொரு கடாயில் எண்ணைய் விட்டு நன்றாக காய்ந்ததும் அரிந்த வெங்காயம் மட்டும் போட்டு பொன்னிறமானதும் கீரை பாச்சோற்றில் தட்டி கீரை பொடி, மாசி போட்டு கிளரி விடவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *