கேழ்வரகு அடை தோசை

கேழ்வரகு அடை தோசை

தேவையான பொருட்கள்
10 பரிமாறுவது
1கப் பச்சரிசி
½ கப் முழு உளுந்து
¼ கப் கடலை பருப்பு
2 மேஜைக்கரண்டி கொள்ளு
2 மேஜைக்கரண்டி முழு பயறு
1 தேக்கரண்டி வெந்தயம்
2 கப் கேழ்வரகு முழு தானியம்
1 தேக்கரண்டி ஈஸ்ட்
2கப் ஸ்பினாச் கீரை, பொடியாக நறுக்கியது
1கப்வெங்காயம் சாப்ட்
1 அங்குலம் இஞ்சி
4 பல் பூண்டு
6உலர்ந்த கார சிகப்பு மிளகாய்
1/4 தேக்கரண்டி பெருங்காயம்
1/4 தேக்கரண்டி பெருங்காயம்
1 மேஜைகரண்டி சீரகம்
தேவையானஎண்ணை (நல்லெண்ணை)
தேவையானஉப்பு

1 ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்.

2ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்.

3 பெரிய பாத்திரத்தில் 6 கப் நீர் சேர்த்து உளுந்து,வெந்தயம். கடலை பருப்பு, பயறு, கொள்ளு அரிசி ஊறவைக்க.; 6 மணி நேரமாவது ஊறவேண்டும். நான் ஓவெர்நைட் ஊறவைத்தேன்.வடித்து நீர் சேர்த்து பிளேண்டரில் போட்டு, வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய் சேர்த்து சிறிது கொர கொரவென்று அறைக்கவும். முழூ கேழ்வரகு உபயோகித்தால் தனியாக ஊற வைத்து அறைக்கவேண்டும். பின் இரண்டு மாவுகளையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தோசை மாவை பெரிய பாத்திரத்தில் போட்டு ஈஸ்ட் சேர்த்து சுத்தமான கையால் ஒன்றாக கலக்க. 4 மணி நேரத்தில் பொங்கிவிடும்.

4 தேவையான உப்பு சேர்த்து கிளறவும், கீரை, சீரகம், பெருங்காயம் சேர்த்து கிளற. மாவு அடை செய்ய தயார்.
தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைக்க, நான் இரும்பு தோசைக் கல்லை உபயோகிப்பேன். சூடான பின், எண்ணை தடவுக எப்பொழுதும் தோசை செய்வது போல 1 கப் மாவில் ஒரு அடை தோசை செய்க. அடை தோசை மேல் பரவலாக ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றுக. இரண்டு பக்கமும் பிரவுன் ஆக வேண்டும். 2-3 நிமிடங்களில் சுவையான சத்தான வாசனையான அடை தோசை தயார்.

5 எப்பொழுதும் சுவைத்துப் பாருங்கள். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பாரோடோ, மிளகாய் பொடியுடனோ, அல்லது விருப்பமான சட்னியோடோ பரிமாறுக. சின்ன பசங்களுக்கு தோசையுடன் ஜாம் சேர்த்து பரிமாறலாம். நான் சாம்பார், தக்காளி சட்னி கூட பறிமாறினேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *