தேவையான பொருட்கள்:மட்டன் – 1/2 கிலோசின்ன வெங்காயம் – 150 கிராம்பெரிய தக்காளி – 1தேங்காய் துருவல் – 1/2 கப்இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்மல்லித்தூள் – 3 டீஸ்பூன்சீரகம் – 1/2 டீஸ்பூன்சோம்பு – 1/2 டீஸ்பூன்பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2கறிவேப்பிலை, கொத்தமல்லி – ஒரு கைப்பிடிஉப்பு,எண்ணெய் – தேவையான அளவுமட்டன் குழம்பு செய்முறை:முதலில், மட்டனை நன்கு சுத்தம் செய்து, மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.இப்போது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும்.அனைத்தும் பொரிந்து வந்ததும், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர், மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.அடுத்ததாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு குழைந்து வரும் வரை வதக்கவும். பின்னர், ஊறவைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து விடவும். இப்போது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.மசாலாவில் பச்சை வாசனை போனதும், மட்டன் மூழ்கிற அளவிற்கு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5-6 விசில் வரும் வரை வேகவிடவும். இதற்கிடையில், நறுக்கிய தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.மட்டன் நன்கு வெந்த பிறகு, குக்கரை திறந்து அரைத்து வைத்த தேங்காய் விழுது சேர்த்து கலந்து விடவும். குழம்பு ஒரு கொதி வந்தவுடன், அடுப்பை மிதமான தீயில் வைத்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிடவும். கடைசியாக, உப்பு சரிபார்த்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மட்டன் குழம்பு தயார்.இந்த மட்டன் குழம்பை சுட சுட சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். அப்புறம் என்ன யோசனை ஒரு முறை இப்படி மட்டன் குழம்பு செஞ்சி பாருங்க
