செட்டிநாடு மட்டன் சுக்கா

Chettinad Mutton Sukka Recipe in Tamil

அரை கிலோமட்டன்
10 சின்ன வெங்காயம்
தேவையான அளவுஎண்ணெய்
தேவையான அளவுஉப்பு
சிறிதளவுமஞ்சள் தூள்
செட்டிநாடு மட்டன் மசாலா
ஒரு ஸ்பூன் கசகசா
பிரிஞ்சி இலை
2கிராம்பு
2ஏலக்காய்
சிறிதளவுபட்டை
ஒரு ஸ்பூன் சீரகம்
ஒரு ஸ்பூன் சோம்பு
ஒரு ஸ்பூன் மிளகு
ஒரு ஸ்பூன் மல்லி
5 பட்டை மிளகாய்

செய்முறை:

மட்டன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ளவும். வெறும் வாணலியில் கசகசா பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.சீரகம் சோம்பு மிளகு சேர்த்து வறுக்கவும்.பட்டைமிளகாய் மல்லி சேர்த்து வறுத்து ஆறியதும் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்த மசாலா உப்பு சேர்த்து கொதி வந்ததும் மட்டன் சேர்க்கவும்.நன்கு வேக வைக்கவும் சுவையான மட்டன் சுக்கா தயார்.