தேவையான பொருட்கள்
4நபர்கள்
800 கிராம் சிக்கன் மீடியம் சைஸ் கட் செய்தது
2டேபிள் ஸ்பூன் நெய்
4டேபிள் ஸ்பூன் எண்ணெய்
200கிராம் பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது
தேவையானஅளவு உப்பு
1/2டீஸ்பூன் மஞ்சள்தூள்
1டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள்
வறுத்து பொடி செய்ய :
2 ஏலக்காய்
4 சிறிய துண்டு பட்டை
6 இலவங்கம்
8 வரமிளகாய்,
10பல் பூண்டு
1/2டீஸ்பூன் சோம்பு
1/2டீஸ்பூன் சீரகம்
1டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி
சிறிதளவுகறிவேப்பிலை
4டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
சமையல் குறிப்புகள்
30 நிமிடங்கள்
1 ஒரு வாணலியில் ஏலக்காய் முதல் கொத்தமல்லி வரை உள்ள பொருட்களை வறுத்து ஆறவிட்டு பொடி செய்து வைக்கவும். பூண்டு வறுத்து இந்தப் பொடியுடன் சேர்த்து கரகரப்பாக அரைத்து வைக்கவும்.
2 ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனைப் போட்டு உப்பு, மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து 1மணி நேரம் ஊற வைக்கவும்.
3 ஒரு வாணலியில் எண்ணை, நெய் விட்டு காய்ந்ததும் பெரிய வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும். இதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து 10 நிமிடம் நன்கு வதக்கவும்.
4 மூடி வைத்து 10நிமிடம் சிம்மில் வைத்து வேக வைக்கவும். வெந்ததும் பொடித்த மசாலா தூள் சேர்த்து வதக்கவும். மூடி வைத்து சிம்மில் 10நிமிடம் வேக வைத்து கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும். காரசாரமாக சூப்பர் டேஷ்டில் சிக்கன் ரெடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது.