தேவையான பொருட்கள்
அரை கிலோ சிக்கன்
இரண்டு ஸ்பூன் முழு மல்லி
ஒரு ஸ்பூன் மிளகு
ஒரு ஸ்பூன் சீரகம்
ஒரு ஸ்பூன் சோம்பு
பத்து முந்தரி பருப்பு
எட்டு வரமிளகாய்
ஒரு துண்டு இஞ்சி
இரண்டு மூன்று பல் பூண்டு
எட்டு ஸ்பூன் நல்லெண்ணெய்
ஒரு பெரிய வெங்காயம்
ஒரு தக்காளி
தேவையானஅளவு உப்பு
தேவையானஅளவு மல்லி இலை
தேவையானஅளவு புதினா இலை
2பிரிஞ்சி இலை
சிறிதளவுகல்பாசி
ஒரு ஸ்டார்
மூன்று கிராம்பு
மூன்று ஏலக்காய்
எட்டு ஸ்பூன் துருவிய தேங்காய்
ஒரு கொத்து கறிவேப்பிலை
கால் ஸ்பூன் சோம்பு
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
ஒரு ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
சமையல் குறிப்புகள்
1 முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் தயாராக வைக்கவும். சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம்,தக்காளி இரண்டையுமே நீலவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
2 முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாய் வைத்து கடாய் சூடானதும் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானது மல்லி சோம்பு சீரகம் கருகாமல் வறுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிய வெங்காயம், வர மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கி கொள்ளவும். ஆரிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.
3 மற்றொரு கடாயில் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுந்தம் பருப்பு பொரிந்த உடன் பிரிஞ்சி இலை கல்பாசி கிராம்பு, ஏலக்காய் சோம்பு பட்டை சேர்த்து பொரிந்த உடன் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் அதனுடன் தக்காளியை சேர்க்கவும்.
4 தக்காளி நன்றாக மசிந்ததும் அதில் சிக்கன்அரைத்த விழுதை சேர்த்து மஞ்சள் தூள் காஷ்மீரி சில்லி பவுடர், சேர்த்து நல்லெண்ணெய் பிரியும் அளவுக்கு வதக்கவும்.
5 வதங்கிய பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கொதித்து ஒரு 20 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.
6 20 நிமிடம் கழித்து மூடியை திறந்து பார்த்தால் சிக்கன் குழம்பு தயார். சூடாக பரிமாறவும்
7 இப்போது சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு தயார்.