மண்பானை தண்ணீரின் மகத்துவம்!

வெயில் காலம் வந்துவிட்டாலே மண்பானை விற்பனையை பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. குளிர்ச்சியான தண்ணீர் வேண்டும் என்று நினைக்கிற எளிய மக்களின் இனிய தேர்வாகவும் மண்பானை இருக்கிறது. இந்த மண்பானை நீர் உடலுக்குக் குளிர்ச்சி மட்டும் தருவதில்லை.பல நன்மைகளையும் மருத்துவரீதியாக தருகிறது. காலம் காலமாகவே நம்முடைய முன்னோர்கள் சமையலுக்கும், தங்களுடைய மற்ற தேவைகளுக்கும் மண்பானையை உபயோகப்படுத்தி வந்திருக்கின்றனர். முக்கியமாக கஷாயம் போன்ற மருந்துப் பொருட்களைத் தயாரிக்க மண்பானைதான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதிலிருந்தே மண்பானையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்….

Read More

கேரட் ஜூஸின் நன்மைகள்!

கேரட் ஜூஸ் குடிப்பதால் கண் பார்வை, தோல் மற்றும் இதயம் போன்ற பல உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கண்பார்வை: கேரட்டில் வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்) அதிகம் உள்ளது. இது கண் பார்வையை மேம்படுத்துகிறது. தோல்: கேரட் சாறு சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது, இது சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதய ஆரோக்கியம்: கேரட்டில் பொட்டாசியம் உள்ளது, இது…

Read More

கோடையைக் குளிர்விக்கும் வெள்ளரி

வெள்ளரிக்காய் பல நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக கோடையில் உடலை குளிர்விப்பதற்கும், நீரேற்றமாக இருப்பதற்கும் இது உதவுகிறது. இது மலச்சிக்கல், சிறுநீர் பாதை கோளாறுகள், பசியின்மை, எடை குறைவு போன்ற பிரச்னைகளை சரிசெய்யவும், சருமத்தை குளிர்விக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள் வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உள்ளன. இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல்,…

Read More

சுக்கின் மகத்துவம்!

சித்த மருத்துவத்தில் முக்கிய சூரணமாக இருக்கும் திரிகடுகு சூரணத்தில் 3ல் ஒரு பங்கு சுக்கு ஒன்றாகும். *சுக்குடன் சிறிது சுண்ணாம்பு, சிறிது மிளகு சேர்த்து மை போல் அரைத்து தொண்டையில் பூசி வந்தால் தொண்டைக் கட்டு குணமாகும். *சுக்கு, மிளகு, மல்லி, திப்பிலி, சித்தரத்தை சம அளவு எடுத்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து, நன்கு கொதித்த பின் வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்து லேசான சூட்டுடன் பருகினால் நீண்ட நாள் சளி தொல்லை குணமாகும். *சுக்கு, மிளகு,…

Read More

வயிற்றைக் காக்கும் ஓமம்

*ஓமவாட்டர் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம். *ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். *ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். *தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது. *அரை தேக்கரண்டி ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும். வயிற்றுவலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம்…

Read More

தயிரில் உள்ள அற்புதங்கள்!

தயிரை ஒரு கை நிறைய எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். *புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும். *தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் 3 நாட்கள் வரை தயிர் புளிக்காது. *தயிர் நம் உடலுக்கு குளிர்ச்சியை தரும் ஒரு அருமருந்து. *பாலில் உள்ள புரோட்டீனை விட தயிரில் உள்ள புரோட்டீன், சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். *த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரித்து நன்மை செய்யும்…

Read More

சுரைக்காய் தரும் சுகம்!

சுரைக்காயில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் இருப்பதால் செரிமானப் பிரச்சனைகளை சரி செய்கிறது. சுரைக்காயில் அதிக அளவு கலோரிகள் இல்லாததாலும், நீர்ச்சத்து அதிகமாக இருப்பதாலும் உடல் எடையைக் குறைக்க துணை புரிகிறது.பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தை சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.சுரைக்காயின் சாறு காதுவலியைப் போக்குகிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், நோயை குணமாக்குகிறது. உடலில் ஏற்படும் உஷ்ணத்தைக் குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை வழங்குகிறது. பித்தத்தைப் போக்கும் தன்மை…

Read More

நெல்லிக்காயின் மகத்துவம்

நெல்லிக்காய் சாறு, தமிழரின் பாரம்பரிய சுகாதார மருந்தாக பரிசீலிக்கப்படுகிறது. இது வைட்டமின் ‘சி’யின் மிகச்சிறந்த மூலமாகும். இதில் இருக்கும் வைட்டமின் ‘சி’ உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகிறது. முதன்மையாக, நெல்லிக்காய் சாறு ரத்தத்தை சுத்தப்படுத்தும் பணியை சிறப்பாக மேற்கொள்ளும். இது உடலில் தேங்கியுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதால், உடலின் உள்ளக உறுப்புகள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. நெல்லிக்காய் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. தினசரி உணவுகளை எளிதாகக் கைகொள்ள உதவுவதால், வாயுவாகம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குறைகின்றன….

Read More

 தித்திக்கும் தேன்

தேனுக்கும் மனிதனுக்குமான தொடர்பு காலத்தைக் கடந்தது என்பதையும், தென்கிழக்கு ஆசியாவில் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தேனீக்கள் இருந்திருக்கின்றன என்பதையும், ஸ்பெயின் நாட்டின் வவென்சியா குகைகளில் இருக்கும் ஓவியங்கள் உறுதிப்படுத்துகின்றன. கி.மு. 2100 – 2000 காலத்திலேயே தேன் உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகளாக, பண்டைய எகிப்தியர்கள், பறவைகள், ஈக்கள், பன்றியின் ரத்தம் போன்றவற்றுடன் தேனைக் கலந்து சாப்பிடுவதுடன், குருட்டுத்தன்மை, வலி, வீக்கம் போன்றவற்றிற்கு மருந்தாகவும் தேனைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற வரலாற்றுக் குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன….

Read More

பெர்ரி பழங்கள்… பெரிய நன்மைகள்!

பெர்ரி பழங்கள் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை, இவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது, இவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன, இவை பல்வேறு நோய்களைத் தடுக்கும் வல்லமை கொண்டவை. பொதுவாக பெர்ரி பழங்கள் வண்ணமயமாகவும் இனிப்பு, புளிப்புச் சுவையை கொண்டிருக்கும். இந்த பழங்கள் எல்லாமே ஆரோக்கியமானவை. இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. பெர்ரி பழங்கள் குறித்தும் அவை உடலுக்கு தரும் நன்மைகள் குறித்தும் தெரிந்துகொள்வோம். ராஸ்பெர்ரி பழங்கள் நார்ச்சத்துகளின் நல்ல மூலம் ராஸ் பெர்ரி…

Read More