நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்கிறீர்களா? – உங்கள் உடல்நலத்தை காப்பாற்றும் ‘20க்கு 2’ விதி
பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது, அலுவலகம் அல்லது வீடு எதுவாக இருந்தாலும், உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும்.
மருத்துவ நிபுணர்கள் கூறுவதுபடி, இதைத் தவிர்க்க ‘20க்கு 2’ எனப்படும் எளிய பழக்கத்தைப் பின்பற்றலாம்.
அதாவது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை, குறைந்தது 2 நிமிடங்கள்:
- நடப்பது
- கை, கால்களை நீட்டி, மடக்கி, இயக்குவது
- சின்ன உடற்பயிற்சிகள் செய்வது
இதனால் கிடைக்கும் பலன்:
- உணவுக்குப் பிறகு உடலில் சர்க்கரை அளவு 25% வரை குறையும்
- கண்கள் முதல் கால்கள் வரை முழு உடலுக்கும் ஓய்வு மற்றும் புத்துணர்ச்சி கிடைக்கும்
- நீண்ட நேர அமர்வால் ஏற்படும் வலி, சோர்வு, மற்றும் பிற சிக்கல்கள் குறையும்
சிறிய முயற்சி – நீண்ட ஆயுள்!
‘20க்கு 2’ விதியை தினசரி நடைமுறையில் கொண்டுவருங்கள்.